அடைமழை , இடி , மின்னல் , சூறைக்காற்று அன்று. தெருவெல்லாம்
தண்ணி , நானும் தண்ணி..( சரக்கு )நான் நனைஞ்சு வீட்டுக்கு போய்ட்டுருந்தேன் என்னால நடக்க முடியாம யார் வீட்டு வாசலிலோ உட்கார்ந்தேன் இல்ல விழுந்தேன். அப்போ ஒரு நாய்க்குட்டி கத்திகிட்டே வந்து என் மூஞ்ச நக்கிச்சு நான் அத திட்டிகிட்டே தள்ளிவிட்டேன், ஆனா அது அம்மா அடிச்சுட்டா மறுபடியும் அம்மாக்கிட்ட ஓடி வர குழந்தை போல
என்கிட்டையே வந்து என் மேல ஏறி படுத்துடுச்சு. நான் வேற வழி இல்லாம தடுமாறி அதையும் தூக்கிக்குன்னு வீட்டுக்கு வந்துட்டேன்.எனக்குன்னு யாரும் இல்லாததால இது இருக்கட்டும்னு தோணுச்சு. நான் ஒரு ஓரமாவும் அது ஒரு ஓரமாவும் தூங்கிட்டோம்.நைட்டு இரண்டு மணி இருக்கும் என் மார்ல எதோ ஊர்நாப்ல இருந்துச்சுனு பார்த்தேன் ,அந்த நாய்க்குட்டிதான் என்ட பால் குடிக்க வாய்வச்சுட்டு இருந்துச்சு..அய்யயோ புள்ளைக்கு பசி வந்துருச்சுனு எழுந்து வீட்ல என்ன இருக்குனு பார்த்தா பீடியும் , எப்பவோ நான் தின்னுட்டு போட்ட சோறும் தான் இருந்துச்சு.. அது ரொம்ப கத்த ஆரம்பிச்சுருச்சு வேற வழி இல்லாம அத என் மாரோட அணைச்சு படுக்க வச்சுக்கிட்டே தூங்கிட்டேன். விடியகாத்தால முத வேலையா பால் வாங்கி அதுக்கு என் விரலால பால தொட்டு கொடுத்தேன்.. நான் எங்கையாவது போனா கூட டயத்துக்கு பால் வாங்கிட்டு வந்து கொடுத்துடுவேன்.அதுவும் குடிச்சுட்டு என் மேல ஏறி விளையாடும். எனக்கு ரொம்ப
சந்தோசமா இருக்கும்.புள்ள மாதிரி பார்த்துகிட்டேன். ஒரு நா நான் வர லேட்டாயிருச்சு அது கத்திட்டு கிடந்ததை பார்த்துட்டு தெருவுல இருக்க ஒரு சின்ன பொண்ணு அதுக்கு பிசுகட் கொடுத்து அதுட்ட பேசிட்டு இருந்தா . என்னை பார்த்ததும் வால ஆட்டிகிட்டு வந்துச்சு.நான் அத தூக்கி கொஞ்சுனேன். அந்த பொண்ணு கேட்டா இது பேரு என்ன மாமா .நான் அத குட்டி குட்டின்னு தான் கூப்பிடுவேன் ,பாப்பா நீயே ஒரு பேரு சொல்லேன் .
பாப்பா : ம்ம்ம் பேரு என்ன வைக்கலாம் , இது பையனா , பொண்ணா மாமா .
நான் : அப்பதான் நான் அத தூக்கி காலுக்கு கீழ பார்த்து பையன் பாப்பா
பாப்பா : ம்ம் அப்ப ஜானின்னு கூப்பிடுங்க மாமா
நான் : ஜானி ,ஜானி இனிமே நீ ஜானிடா .
நாட்கள் ஓடின , நாய்க்குட்டியா இருந்த ஜானி குட்டி நாயா மாறி இருந்தான் .ஜானியும் நானும் ஒண்ணா சாப்பிட்டோம் ,குளித்தோம் ,தூங்கினோம் .அக்கம் பக்கம் எல்லோரும் எங்க உன் பையன் ஜானின்னு கேட்கிற அளவு என் மேல பாசமா இருந்தான் .நான் குடிச்சுட்டு வந்தா என்ன பார்த்து குரைப்பான் ,குடிக்காம வந்தா என்ட நல்ல விளையாடுவான் அதனாலையே நான் குடிக்கிறத குறைச்சிகிட்டேன்.
ஒரு நாள் எங்க வீடு எதிர்ல இருக்க பாய் வீட்ல , பாய்னா பையன் இல்லைங்க அவரு ஒரு முஸ்லீம் பாய் ,அவருக்கு இரண்டு பொண்ணு ஒரு மனைவி ,ஏய் நில்லு !இது பாய் கதையா இல்ல நாய் கதையா ?இது நாய் கதைதான் சொல்றேன். எதோ வீசேஷம்னு அந்த பாய் வீட்ல சாப்புட கூப்பிட்டாங்கன்னு நானும் ஜானியும்போனோம் .நான் வீட்டிற்கு உள்ளேயும் ஜானி வெளியேயும் சாப்பிட்டோம் .நான் சாப்பிட்டு வெளிய வந்து பார்த்தேன் ஜானியை காணோம் .நான் ஜானி,ஜானின்னு தேடிகிட்டு போனேன் ..ரொம்ப நேரமா தேடிட்டு ,அது எங்கேயும் இல்ல அப்படினு வீட்டுக்கு வந்து வாசல்ல உட்கார்ந்து இருந்தேன் .இன்னைக்கு அவன் வரட்டும் இரண்டு போட்டாத்தான் அடங்கி கிடப்பான் ,இப்பவே ஊர்மேய கிளம்பிட்டான்னு மனசுக்குள்ள திட்டிகிட்டே இருந்தேன்.
ஆனாலும் மனசுல ஒரு சின்ன பயம் வந்து திரும்ப அவன தேடிப்போனேன். அப்போ குப்ப கொற்ற ஒரு இடத்துல தலை மட்டும் வெளிய தெரிய உடம்பு ஒரு துணில மறச்சு எதோ ஒன்னு தெரிஞ்சுச்சு அது என் ஜானிதான் . கிட்ட போய் பார்த்தேன் ஜானி இன்னும் சாகல ,ஜானி என்னடா ஆச்சு உனக்கு ,எப்படிடா இங்க வந்த எனக்கு ஒன்னும் புரியல நான் அவன தூக்கிட்டு வீட்டுக்கு வந்து வாசல்ல போட்டேன் .ஜானி இழுத்துகிட்டே கிடந்தான் ,அவனுக்கு தடவி கொடுக்கிறத தவிர கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என்னால எதுவுமே பண்ண முடியல.
ஜானி யாரு ? எங்கிருந்து வந்தான் ,எனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் ,அனாதையா இருந்த என்ன அவனுக்கு அப்பா ஆக்கினான் அப்பாவா இருந்த என்ன திரும்பவும் அனாதை ஆக்க போறான் .ஜானியோட கண்ணு என்னையவே வெறிச்சு பார்த்துட்டு இருக்கு ,எனக்கு ஜானி எதோ சொல்றாப்ல இருந்துச்சு . நான் அழுதுகிட்டே ஜானியோட கழுத்துல கைய வச்சு நெறிச்சேன் ,ஜானி கத்தவே இல்லை ,வால ஆட்டினான் .அவன் உயிர் என் கைல அடங்கிருச்சு ,ஜானி அமைதியாகிட்டான் . நான் இனிமேல் ???.
.